ஜெ. 69: ஓபிஎஸ் வீட்டில் குவிந்த தொண்டர்கள் - கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மட்டுமே!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஓபிஎஸ் அணியினரும், சசிகலா அணியினரும் போட்டி போட்டு கொண்டாடி வருகின்றனர். ஓபிஎஸ் வீட்டில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கொண்
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு படத்திற்கு மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது வீட்டில் தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக செயல்படுவதால் கட்சியின் செயல்பாடுகளும் குழப்பமாகவே உள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அவரது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. சசிகலா அணியினர் அவைத்தலைவர் செங்கோட்டையன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் கொண்டாடினர்.

ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். விழா மலரை திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட, துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் பெற்றுக்கொண்டார்.

வாழ்க கோஷம்
தலைமை அலுவலகத்தில் சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது நிர்வாகிகள் சில ஆர்வக்கோளாலும் நிரந்தர முதல்வர் அம்மா என்று முழக்கமிட்டனர். தியாக தலைவி சின்னம்மா என்றும் முழக்கமிட்டனர்.

ஓபிஎஸ் வீட்டில் கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்தனர். அவரது ஆதரவாளர்கள் தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா படத்திற்கு ஒ.பன்னீர் செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதா பிறந்தநாளில் காலையிலேயே முக்கிய அறிவிப்பினை ஓ.பன்னீர் செல்வம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆர்.கே. நகரில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியுள்ளனர். நலத்திட்ட உதவிகள், அன்னதானம் என சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் இரு பிரிவாக பிரிந்து ஜெயலலிதா பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications