For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்ற தேர்தலுக்கு களம் இறங்கும் அதிமுக இளைஞர்- இளம் பெண்கள் பாசறை

Google Oneindia Tamil News

AIADMK youth meet to deliberate on poll preparation
சென்னை: நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நெருங்கி வருவதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் இளைஞர் பாசறை- இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்குவது, நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளைச் சேர்ந்தவர்களை தயார்படுத்துவது, கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்வது குறித்து, இறுதிக் கட்டமாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு "கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள்" வருகின்ற 22.1.2014 முதல் 23.2.2014 வரை நடைபெற உள்ளன.

இந்த ஆலோசனை கூட்டங்கள், அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் ப.குமார் எம்.பி., தலைமையிலும், அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாநில துணை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறும்.

ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் பகுதியைச் சேர்ந்த பாசறை நிர்வாகிகள் அனைவரும் ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்."இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
District youth wings of the ruling AIADMK will hold consultative meetings to deliberate on a host of issues, including preparing functionaries for the Lok Sabha elections. The meetings, to be held between 22 January and February 23 in places including Madurai, Kanchi and Tiruvannamalai, the statement said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X