எய்ட்ஸ் நோயால் அவதி: நாமக்கலில் 2 குழந்தைகளை கொன்று, தம்பதி தூக்கு போட்டு தற்கொலை
நாமக்கல்: நாமக்கலில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதி தங்களின் மகனையும், மகளையும் கொன்றுவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள நைனப்புடையார் தோட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(45). முன்பு லாரி டிரைவராக இருந்த அவருக்கும், அவரது மனைவி வளர்மதிக்கும் எய்ட்ஸ் நோய் இருந்தது. இதனால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தனர்.
தற்கொலை செய்யும் முன்பு அவர்கள் தங்களின் மகள் பிரியா மற்றும் மகன் சரத்குமார் ஆகியோரை நேற்று முன்தினம் இரவு தூக்கிலிட்டு கொன்றனர். பின்னர் கணவனும், மனைவியும் ஆளுக்கொரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதில் பிரியா தற்போது தான் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். சரத்குமார் பிளஸ் 1 படித்து வந்தார்.
நேற்று காலை வளர்மதியின் தாய் அவர்களின் வீட்டுக்கு வந்தபோது 4 பேரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றினர். மேலும் இறப்பதற்கு முன்பு கோவிந்தராஜ் எழுதிய கடிதத்தை கண்டுபிடித்தனர்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் பெயரில் உள்ள எல்.ஐ.சி. தொகையை எனது பெற்றோருக்கும், வளர்மதி பெயரில் உள்ள எல்.ஐ.சி. தொகையை அவரது பெற்றோருக்கும் கொடுக்க வேண்டும். நகை, பணத்தை சகோதரர் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும். இது முக்கியமான கடிதம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications