நர்சிங் மாணவி மரணத்தில் மர்மம்: விசாரணை நடத்தக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா
தூத்துக்குடி: தனியார் மருத்துவமனையில் நர்சிங் மாணவி மர்மமாக இறந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகே புள்ளாவெளி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் அழகுசுந்தரி. தூத்துக்குடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரை கடந்த அக்டோபர் மாதம் பயிற்சிக்காக மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புகாடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. அழகுசுந்தரியுடன் சேர்ந்து மூன்று மாணவிகள் அங்கு பயிற்சிக்கு சென்றனர். இதற்கிடையே அழுகுசுந்தரி இறந்து விட்டதாக சக மாணவி அழகுசுந்தரி தந்தைக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புதுக்கடை போலீசில் அவர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகே உள்ள புல்லாவழி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் அழகுசுந்தரி, தூத்துக்குடியில் உள்ள பாராமெடிக்கல் இன்டிடியூட்டில் நர்சிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி நிர்வாகம் கடந்த அக்டோபர்10ம் தேதி மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு மருத்துவமனைக்கு பயிற்சிக்காக அனுப்பி வைத்துள்ளது. அழகு சுந்தரியுடன் சேர்ந்து 3 மாணவிகள் சென்றுள்ளனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி அழகு சுந்தரி இறந்து விட்டதாக அவருடன் தங்கியிருந்த மற்றொரு மாணவி அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அழகு சுந்தரியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புதுக்கடை போலீஸில் புகார் தெரிவித்தார். அழகு சுந்தரியின் மரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியளர்களிடம் பேசிய மாணவியின் தந்தை, என் மகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு எனக்கு தகவல் வந்தது. ஆனால் 6.30 மணிக்கு என் மகள் இறந்துவிட்டதாக கூறினர். காய்ச்சல் வந்த ஒரு மணி நேரத்தில் எப்படி இறந்திருப்பாள்?. எனவேதான் சாவில் மர்மம் இருப்பதாக கருதுகிறோம். இதுபற்றி போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும். உண்மை தெரியும் வரை என் மகளின் உடலை வாங்க மாட்டேன் என்றார். ஆனால் கணேசன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அழகுசுந்தரியின் உடலை பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில், அழகு சுந்தரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக காப்புக்காடு மருத்துவமனையின் டாக்டர் செல்வம் சிவலிங்கம், தூத்துக்குடியில் உள்ள பாமெடிக்கல் கல்லூரி முதல்வர் ஸ்டீபன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்யக் கோரியும், அழகு சுந்தரியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பூமயில் தலைமை தாங்கினார். தலைவர் கலைசெல்வி, பொருளாளர் விஜயலட்சுமி, சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பொன்ராஜ், மாணவர் சங்க தலைவர் சுரேஷ்பாண்டி, உட்பட புல்லாவழி கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கிராம மக்கள் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. சிப்காட் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்ததை நடத்தினர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு திரும்பி சென்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications