விமானத்தில் ஏர் ஃபோன் கேட்டு இருக்கையை சேதப்படுத்திய பயணிகள்.. ரூ.60,000 அபராதம்
திருச்சி: மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் இருக்கையின் கைப்பிடியை சேதப்படுத்தியதாக பயணிகள் இரண்டு பேருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மலேசியாவிலிருந்து சென்னை வழியாக திருச்சி வரும் ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று முன்தினம் சென்னை வந்தது. சென்னையில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் அங்கிருந்து திருச்சி புறப்பட்டது. அப்போது இருக்கையில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஃபோன் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி விமான பணிப்பெண்களிடம் சிவகங்கையைச் சேர்ந்த அப்துல்லா மற்றும் அப்துல் வஹாப் ஆகிய இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விமானம் திருச்சி வந்தடைந்ததும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள் இருவரும் இருக்கையின் கைப்பிடியை உடைத்ததாக விமானப் பணிப்பெண்கள் விமானநிலைய மேலாளரிடம் புகார் அளித்தனர். அதையடுத்து இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பயணிகள் இருவரும் விமான பணிப்பெண்கள் மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் கூறினார். அப்போது, கைப்பிடி உடைந்ததற்கான சேதத்தொகையை கட்டி விடுவதாக பயணிகள் இருவரும் கூறினர். அதனையடுத்து இருவருக்கும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இருதரப்பினரும் சமாதானமாக போவதாக தெரிவித்ததையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications