கொஞ்சம் நம்புங்க பாஸ்... நம்ம சென்னையில் தூய காற்று விற்பனைக்கு !
சென்னை: உணவில்லாமல் சிலநாட்கள் வாழமுடியும், தண்ணீர் இல்லாமலும் வாழமுடியும், ஆனால் சுவாசிக்காமல் உங்களால் வாழ முடியுமா? என்ற விளம்பரத்துடன் சென்னை நகரில் சிலிண்டரில் அடைக்கப்பட்ட காற்று தற்போது விற்பனைக்கு வந்துவிட்டது.
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சீனாவில் காற்று மாசு அடைந்து வரும் சூழலில் கனடா நாட்டு நிறுவனம் ஒன்று தூய்மையான மலைக் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கின்றது. கனடா நாட்டில் உள்ள பான்ஃப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது தனியார் நிறுவனம் ஒன்று.

இந்த நிலையில் தற்போது இந்தியாவின் பெருநகரங்களும் காற்று மாசுபாட்டை சந்தித்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் காற்று மாசுபாட்டை குறைக்க ஒன்றைப் படை, இரட்டைப் படை என்ற முறையில் வாகனங்களை இயக்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை சோதனை ஓட்டமாகவும் இயக்கி பார்த்தது மாநில அரசு. இதனிடையே ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மக்களுக்கு விற்கும் வியாபாரத்தை நிறுவனம் ஒன்று சென்னையில் துவங்கியுள்ளது.
மருத்துவ சான்றிதழ் எதுவும் தேவைப்படாத இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்று அந்த நிறுவனத்தின் விற்பனை முகவர்கள் கூறுவது ஒரு வேடிக்கையாக இருந்த போதிலும் விளையாட்டு வீரர்களுக்கு இந்த சுவாசக் காற்று சிலிண்டர்கள் உதவியாக இருக்கும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், காற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு சென்னையில் சுற்றுச்சூழல் அவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதா என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அரசு அனுமதியில்லாமல் இப்படிச் சிலின்டர்களை விற்பனை செய்யமுடியுமா எனச் சிலர் கேள்வியெழுப்பியதுடன் இதற்கு அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமெனவும் சிலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
ஆனால் மருத்துவரின் ஆலோசனையுடன் சரியான அளவில் இதனை எடுத்துக் கொண்டால் நல்லது. மூச்சு திணறல் உள்ளவர்கள், மலையேற்றம், உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் பயனுள்ளதாக இருக்கும். நாள் முழுவதும் துாசி காற்றில் வெளியில் அலைந்து வருவோர் மருத்துவர் ஆலோசனையின் படி ஓரிரு முறை இதனை சுவாசித்தால் புத்துணர்ச்சி பெற வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இயற்கையை நாம் அழித்தால் இப்படித்தான் ஒவ்வொன்றாக நாம் காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு தள்ளப்படுவோம் என்பதே இதிலிருந்து தெரிகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications