நடிகர் விஜய்யின் மாநாட்டில் "அஜித்"! நெகிழ்ந்த தமிழக வெற்றிக் கழகம்!
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வி.சாலை கிராமத்தில் இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அஜித் ரசிகன்- விஜய் தொண்டன் என்ற பதாகைகளும் ஆம்புலன்ஸ்களும் விஜய் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டியில் இன்று முதல் முறையாக மாநாடு நடத்தும் விஜய், இந்த மாநாட்டை வைத்தே மக்கள் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொண்டு நமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் தன்னை நம்பி வரும் தொண்டர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஏராளமான விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டையொட்டி விக்கிரவாண்டி முதல் வி.சாலையில் விஜய் மாநாடு நடைபெறும் இடம் வரை பெரிய பெரிய கட் அவுட்கள் அலங்கரித்து வருகின்றன. அந்த வகையில் அந்த மாநாட்டில் ஒரு கட் அவுட்டில் அஜித் ரசிகன்- விஜய் தொண்டன் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது.
இதை பார்க்கும் விஜய் ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் பூரித்து போயுள்ளனர். இந்த நிலையில் எல்லாவற்றையும் விட ஹைலைட்டாக மாநாட்டுக்கு வரும் போது கூட்ட நெரிசலில் எந்த அசம்பாவிதமும் நடந்து விடக் கூடாது என்பதற்காக விஜய் மாநாட்டில் ஏராளமான தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் மாநாட்டு முகப்பிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதில் ஓரிரு வாகனங்களின் பின்புறத்தில் அஜித்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாகவே எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி- கமல்- விஜய் - அஜித் என ரசிகர்களுக்கு இடையே போட்டி இருந்து கொண்டே இருக்கும். அதிலும் சமூகவலைதளங்கள் வந்துவிட்ட நிலையில் அவர் படத்தை இவர் ரசிகர்கள் திட்டுவதும் , இவர் படத்தை அவர் ரசிகர்களும் விமர்சிப்பதும் அதிகரித்துள்ளது.
ஆனால் இவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் எந்த ஈகோவும் இல்லாமல் பழகியவர்கள், பழகி வருகிறார்கள். நடிகர் அஜித்தும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பது தெரியும். இதை விஜய்யே ஒருவரை நண்பர் அஜித் போல் ஸ்டைலா கோட் சூட் போட்டுக்கிட்டு வந்துட்டேன் என்றார். ஆனால் ரசிகர்கள் எலியும் பூனையுமாகத்தான் இருந்தனர்.
இனியாவது இவர்களது சண்டை ஓய்ந்து ஒன்றிணைவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications