அஜித்-ங்கற பேர்ல ஒரு நடிகர் இருக்கார்ல...? டவுட் கேட்டு தெறிக்க விடும் ஈவிகேஎஸ்!
சென்னை: வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல, பிரபலமானவர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கும் என்ற பிம்பமும் சமூகத்தில் உள்ளது.
ஆனால், நிஜத்தில் சிலப் பிரபலங்கள் பேசுவதைப் பார்த்தால் இது உண்மையா என்ற ஆச்சர்யம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.
அந்தவகையில், ஆனந்த விகடனின் குறும்புக் கேள்விகள் பகுதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் அளித்துள்ள பேட்டியைப் பார்த்தால் நமக்குத் தலை சுற்றுகிறது.

எத்தனை டாஸ்மாக்...
அதில், தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன என ஒரு கேள்வி. இதற்கு சரியான பதில் 6,835. ஆனால், மதுவிலக்கிற்கு எதிராக பொங்கியெழும் கட்சிக்காரர்களாக இவர்கள் இதற்கு கூறும் பதிலைப் பாருங்கள்.

தடுக்கி விழுந்தா டாஸ்மாக்...
‘எனக்கு எண்ணிக்கை தெரியாது. ஆனா, தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடைகளில் தான் விழணும்' என மழுப்பலாக பதிலளித்துள்ளார் ஈவிகேஎஸ்.

நம்பர்ல வீக்...
இந்தக் கேள்விக்கு வானதி சீனிவாசனோ, ‘நான் நம்பர்ல வீக். டாஸ்மாக் ஒழிந்தால் தான் தமிழ்நாடு செழிக்கும் என்பது மட்டும் தெரியும்' என மிகவும் பாதுகாப்பாக பதிலளித்துள்ளார்.

200, 300 இருக்குமா?
இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே போய், ‘ஏங்க என்னைப் பார்த்தா டாஸ்மாக் போற மாதிரியா இருக்கு? என்கிட்ட இப்படிக் கேட்டுட்டீங்களே? நான் ஒரு பச்சைக் குழந்தைங்க. சரி, 200, 300 இருக்குமா?' எனக் கேட்டு தலை சுற்ற வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா.

ஜாஸ் சினிமாஸ்...
இதேபோல், பெரும் பரபரப்பைக் கிளப்பிய ஜாஸ் சினிமாஸ் குறித்த கேள்விக்கு, ‘அந்த நிறுவனத்தின் பெயர் தெரியவில்லை. ஆனால், ஆயிரம் கோடிக்கு 11 தியேட்டர்கள் வாங்கியதாகச் செய்திகள் படித்தேன்.

ஞாபகம் இல்லீங்களே...
அவர் ஒரு தியேட்டர் வாங்கியிருந்தால் எனக்கு ஞாபகம் இருக்கும். 11 தியேட்டர்களின் பெயரையும் எப்படி என்னால் மனப்பாடம் செய்ய முடியும் என பதிலளித்திருக்கிறார் ஈவிகேஎஸ்.

சினிமாஸ்-னு முடியும்...
இந்தக் கேள்விக்கு வானதி சீனிவாசனோ, "இந்தத் திரையரங்கம் வேளச்சேரியில் இருக்குனு தெரியும். ஆனா, என்ன பேருனு ஞாபகத்துக்கு வரலை. ஏதோ சினிமாஸ்னு முடியும்' என பதிலளித்து பதற வைத்துள்ளார்.

சசிகலானா யாரு...
கட்சித் தலைவர்கள் ஒரு மாதிரி ஷாக் கொடுத்தால் இந்தக் கேள்விக்கு வேறு மாதிரி பதிலளித்து ஹார்ட் அட்டாக் வரவழைக்கிறார் ஐஸ்வர்யா. அதாவது, "பாலிடிக்ஸ் கலந்த சினிமா கொஸ்டீனா? சரி, ஜெயலலிதா தெரியும். சசிகலானா யாரு... ஜெயலலிதா பிரண்டா? தியேட்டர் எல்லாம் வாங்கியிருக்காங்களா... ரொம்ப வசதியானவங்க போல..." என கடைசி வரைப் பதிலைச் சொல்லாமல் எதிர்கேள்விகளாக கேட்டு அடுக்கியிருக்கிறார்.

அஜித்-னு ஒரு நடிகர்...
அரசியல், சமூகம் குறித்த கேள்விகளுக்குத் தான் இப்படிப் பதிலளிக்கிறார்கள் என்றால், சினிமா அதற்கும் மேலே. நானும் ரௌடிதான் படம் குறித்த கேள்விக்கு, ‘இப்போ அஜித்-ங்கற பேர்ல ஒரு நடிகர் இருக்கார்ல? எனக் கேட்டு தெறிக்க விடுகிறார் ஈவிகேஎஸ்.
மிடியலைடா சாமி...
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications