For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளஸ்டூ தேர்வு... அன்பு மகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.கே.மூர்த்தி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்டூ தேர்வு தொடங்கியது. இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளன. ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 106 சிறைக் கைதிகள் உள்ளிட்ட 6,550 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 82,044 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் என் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்

Posted by AK Moorthy on Thursday, March 3, 2016

தேர்வு எழுதுபவர்களில் 3 லட்சத்து 91,806 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 47,891 பேர் மாணவிகள். மாணவர்களைவிட 56,085 மாணவிகள் கூடுதலாகத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களைத் தவிர, 42,347 பேர் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுதப் பதிவு செய்துள்ளனர்.

தேர்வு எழுதும் கைதிகள்: சென்னை புழல், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 106 சிறைவாசிகளும் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வெழுதவுள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சரும், பாமக தலைவருமான ஏ.கே.மூர்த்தி தனது மகள் பிளஸ்டூ தேர்வு எழுதுவதையொட்டி அவரது புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்து தனது பேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

English summary
Former union minister AK Murthy has wished his daughter to do well in +2 exams which began today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X