அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தோஷம்... வாட்ஸ் அப்பில் வேகமாக பரவும் தகவல்
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தோஷம் ஏற்படும் என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் இந்த நாளில் தங்கம் வாங்கினால் தோஷம் ஏற்படும் என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
அட்சய திருதியை அன்று அவரவர் வசதிகேற்ப பொருள்களை வாங்கினால் அவை சேரும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆடை, அணிகலன்கள், பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற தகவல் பரவலாக பரவி வருகிறது.

இதற்கு 15 நாள்களுக்கு முன்னரே நகைக் கடை வியாபாரிகள் கவர்ச்சியான விளம்பரங்களை செய்து வந்தன. அதாவது தங்கத்தின் எடைக்கு வெள்ளி இலவசம், சவரனுக்கு இத்தனை ரூபாய் தள்ளுபடி, நகைகளை தேர்வு செய்து அட்வான்ஸ் தொகையை கட்டிவிட்டால் அட்சய திருதியை அன்று தங்கத்தின் விலை ஏறினாலும் மக்கள் புக் செய்த நாளன்று விற்கப்பட்ட விலைக்கே தங்கம் வழங்குவது உள்ளிட்ட விளம்பரங்களை அளித்து வருகின்றன.
அட்சய திருதியை அன்று ஒரு குண்டுமணி பவுனாவது வாங்கினால் வீட்டில் சொர்ண மழை பெய்யும் என்ற மக்கள் நம்புவதால் கடந்த அமாவாசை முதல் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தோஷம் ஏற்படும் என்று ஒரு வைதீகர் கூறும் தகவல் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அதில் அவர் குறிப்பிடுகையில், அட்சய திருதியை நாள் என்பது முகூர்த்த நாள் அல்ல. இந்த நாள் புண்ணிய காலம் என்று திதி நிர்ணய காண்டம், வர்ணாஸ்ரமம் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளது.
வைதீக தர்மத்தின்படி அட்சய திருதியை அன்று பித்ரு காரியம் செய்வதும் , அன்னதானம் செய்வது, விஷ்ணு சம்பந்தமான ஜபங்களை செய்வது, ஆடை தானங்கள் செய்வதும்தான் சிறந்தது. காசு கொடுத்து வாங்கும் சொர்ணம் வளராது. அட்சயம் என்றால் வளரும் என்ற பொருளை கொண்டு தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இனியாவது மக்கள் விழித்துக் கொள்ளுங்கள் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications