For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி மெரீனாவில் இறங்கும் வைபவம்.. பெருசுகளுக்கு தலைக்கு 500, பொடுசுகளுக்கு 200 ரூவாயாம்யா!!

Google Oneindia Tamil News

Recommended Video

    அழகிரி பேரணிக்கு வந்தவர்களுக்கு கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?- வீடியோ

    சென்னை: சென்னை கடற்கரையில் இன்று நடந்தேறிய "அழகிரி கடலில் இறங்கும்" அதாவது கருணாநிதி நினைவிடம் நோக்கி நடத்திய அமைதிப் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நல்ல கவனிப்பாம்.

    பேரணியில் கலந்து கொண்டவர்களில் 99.99 சதவீதம் பேர் மதுரை, தேனி, ராமநாதபுரம் என தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். குடும்பம் குடும்பமாக கூட்டி வந்துள்ளனர்.

    யே.. வாப்பே.. பீச்சைப் பார்த்தோமா, பிரியாணியை சாப்பிட்டோமா.. ஜாலியா போய்ட்டு வரலாம் என்று கூறி அழைத்து வரப்பட்டவர்கள் பலராம். பேமேன்ட் கரெக்டாக பேசித்தான் கூட்டி வந்துள்ளனர் என்று சொல்கிறார்கள்.

    அமைதியோ அமைதி

    அமைதியோ அமைதி

    இன்று நடந்த அமைதிப் பேரணியின் மூலமாக அழகிரி எதையும் சாதித்ததாக தெரியவில்லை. ஆனால் தன்னாலும் ஏதோ ஓரளவுக்கு கூட்டத்தைக் கூட்ட முடியும் என்பதை மட்டும் காட்டியுள்ளார் இந்த பேரணியின் மூலமாக.

    நல்ல கவனிப்பு

    நல்ல கவனிப்பு

    இந்த பேரணிக்கு வந்தவர்கள் பெரும்பான்மையானோர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். அழகிரி ஆதரவாளர்களால் கூட்டி வரப்பட்டவர்கள். அனைவருக்கும் நல்ல கவனிப்பாம்.

    இம்புட்டு கொடுத்திருக்காங்களாம்

    இம்புட்டு கொடுத்திருக்காங்களாம்

    இதில் கலந்து கொண்டவர்களுக்கு (ஆம்பளையாள், பொம்பளையாள்) பெரியவர்களுக்கு தலைக்கு 500 ரூபாயாம். குட்டீஸ்களுக்கு அதாவது குழந்தைகளுக்கு தலைக்கு ரூ. 200 ரூபாயாம். இது போக 3 நேர சாப்பாடு இலவசமாம்.

    நீட்டா வந்துட்டு நைட்டோடு போயிடனும்

    நீட்டா வந்துட்டு நைட்டோடு போயிடனும்

    வந்தவர்கள் யாரும் எந்த இடத்திலும் தேவையில்லாமல் எந்தப் பிரச்சினையிலும் ஈடுபடக் கூடாது. யார் வந்து வம்பிழுத்தாலும் கண்டுக்காமல் போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தனராம். அனைவருமே தாங்கள் வந்த வாகனங்களிலேயே இன்று இரவு மதுரைக்குக்கு கிளம்புகிறார்களாம்.

    English summary
    Sources say that MK Alagiri's supporters have spent huge to the Chennai rally as the persons who attended the rally were paid.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X