ஆலந்தூர் இடைத்தேர்தல்: அதிமுக 18708 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
சென்னை: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமன் வெற்றி பெற்றார். 18708 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஆலந்தூர் தொகுதியை கைப்பற்றியது.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர்.

அ.தி.மு.க. வேட்பாளராக வி.என்.பி.வெங்கட்ராமன், தி.மு.க. வேட்பாளராக முன்னாள் நகரசபை தலைவர் ஆர்.எஸ்.பாரதி, தே.மு.தி.க. வேட்பாளராக ஏ.எம்.காமராஜ், காங்கிரஸ் சார்பில் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத், ஆம் ஆத்மி கட்சி சார்பில் எழுத்தாளர் ஞாநி ஆகியோர் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.என்.பி வெங்கட்ராமன் 89295 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். திமுக வேட்பாளர் ஆர். எஸ். பாரதி பெற்ற வாக்குகள் 70587 ஆகும். மூன்றாவது இடத்தில் இருக்கும் தேமுதிக வேட்பாளர் 20442 வாக்குகளைப் பெற்றார்.
இந்த தொகுதியில் 4248 நோட்டா வாக்குகள் பதிவாகின. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் 6535 வாக்குகள் பெற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஞாநி சங்கரன் 5729 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
அதிமுக வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 18708 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆலந்தூர் தொகுதியை கைப்பற்றினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications