அசத்தலாக நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. ஒரே சுற்றில் 8 காளைகளை பிடித்த வீரருக்கு கார் பரிசு
மதுரை: உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டை காண பார்வையாளர்கள் குவிந்திருந்தனர். மீடியாக்கள் பலவும் நேரடி ஒளிபரப்பு செய்தன. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முன் கோயில் காளைகளுக்கு மரியாதை வழங்கப்பட்டது. இதன்பிறகு, முதல்வர் முன்னிலையில் மாடுபிடிவீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதல்வரும், துணை முதல்வரும் ஜல்லிக்கட்டை பார்வையிட்டு மகிழ்ந்தனர். காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு சுமார் 1 கோடி ரூபாய்க்கு பரிசுமழை அறிவிக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. மொத்தம் 571 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டிருந்தன. 697 வீரர்கள் அதில் பங்கேற்றனர். ஒரே சுற்றில் 8 காளைகளை பிடித்த 681-ஆம் எண் கொண்ட மாடுபிடி வீரர் அஜய் முதல் பரிசாக 'ஹேட்ஸ்பேக்' வகை காரை தட்டிச் சென்றார்.
ஒரே சுற்றில் 6 காளைகளை பிடித்த, 670-ம் ஆண் வீரர் மற்றும் 214-ம் எண் வீரருக்கு 2வது இடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. 11-ம் எண் வீரர் 3வது இடம் பிடித்தார்.
9 காளைகள் சிறப்பான காளைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன. அமைச்சர் உதயகுமார், ஜல்லிக்கட்டு நிறைவடையும்வரை உடனிருந்து வீரர்களை ஊக்குவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications