ஜன.16ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: தயாராகும் காளைகள்

Subscribe to Oneindia Tamil

அலங்காநல்லூர்: பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி ஜனவரி 16ம் நடைபெறும் என விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டு என்று புகழப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது.

மதுரையை சுற்றி உள்ள மாவட்டங்களிலேயே இந்த ஜல்லிகட்டுப் போட்டிகள் பாரம்பரிய முறைப்படி நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஊர்களில் ஜல்லிக்காட்டு நடத்தப்படுகிறது.

இதேபோல பொன்அமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) திருவாப்பூர், வேந்தன்பட்டி சிரவயல்(காரைக்குடி மாவட்டம் ) பல்லவராயன் பட்டி (கம்பம்) கண்டுப்பட்டி (சிவகங்கை )ஆகிய இடங்களில் ஜல்லிகட்டு நடைபெறும்.

பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இதைக் காண உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அலங்காநல்லூர் வருகிறார்கள். இதற்காக தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ளது. ஜனவரி 16-ந்தேதி வியாழக்கிழமை அன்று அங்குள்ள கோட்டை முனி சாமி திடலில் நடைபெற உள்ளது.

இதையொட்டி முனியாண்டி சுவாமி கோவில் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்குப் பின்னர் விழாக்குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காளைகள் பதிவு

காளைகள் பதிவு

ஜல்லிக்கட்டிற்கு வருகிற 6-ந்தேதி முதல் 9-ம் தேதி முடிய 4 நாட் கள் காளைகள் பதிவு அங்குள்ள வருவாய்துறை அலுவலகத்தில் தொடங்கு கிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் கால்நடைத்துறை மருத்துவர் களால் பரிசோதனை செய்த சான்றிதழ் மற்றும் மாடு பதிவிற்கான ஆவணங்களை வழக்கம்போல் சமர்ப்பிக்க வேண்டும்.

மாடுபிடி வீரர்கள்

மாடுபிடி வீரர்கள்

மேலும் மாடுபிடி வீரர்கள் வருகிற 10, 11&ந் தேதி ஆகிய 2 நாட்கள் உரிய சான்றிதழ்களுடன், 21 வயது முதல் 40 வயது நிரம்பியவர்கள் மட்டும் தங்களது பெயர்களை வருவாய்துறை அலுவலகத் தில் பதிவு செய்யலாம்.

டோக்கன் முறை அமல்

டோக்கன் முறை அமல்

ஜல்லிக்கட்டு விழா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறும். இந்த வருடம் டோக்கன் முறையில் வரிசை நம்பர்படி 1 முதல் 50 மாடுகளும் அதை தொடர்ந்து வரிசையாக முறைப்படி அதே முறை யில் மற்ற மாடுகள் அவிழ்த்து விடப்படும்.

மோட்டார் பைக் பரிசு

மோட்டார் பைக் பரிசு

சிறந்த மாட்டிற்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் விழா முடிந்த பிறகு மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் முன்னிலையில் மோட்டார் சைக்கிள் தனித்தனியாக பரிசாக வழங்கப்படும்.

தங்கம், வெள்ளி பரிசு

தங்கம், வெள்ளி பரிசு

இது தவிர, ஜல்லிக்கட்டு காளைகளை மடக்கி பிடிக்கும் வீரர் களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, கட்டில், வாஷிங்மிஷின் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மிஷின், எல்.சி.டி. டி.வி., தஞ்சாவூர் தட்டுகள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.

பல மாவட்ட காளைகள்

பல மாவட்ட காளைகள்

மேலும், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாத புரம், விருதுநகர் மற்றும் மதுரை உள்பட பல மாவட் டங்களிலிருந்து, ஜல்லிக்கட்டு காளைகள் இங்கு வந்து கலந்து கொள்ளும்.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

உச்சநீதிமன்ற வழி காட்டுதல்படி மாவட்ட நிர்வாகத்தின் நேரடி மேற் பார்வையில் விலங்குகள் நலவாரியம் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. வழக்கம் போல் தேவையான போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+