மீண்டும் போர்க்களமான அலங்காநல்லூர்- கைதானோரை அழைத்துவரும் வரை மறியல் தொடரும் என அறிவிப்பு!
ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை விடுவித்து மீண்டும் அழைத்துவர கோரி அலங்காநல்லூரில் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
மதுரை: அலங்காநல்லூர், வாடிப்பட்டி பகுதிகள் மீண்டும் போர்க்களமாகிவிட்டது. ஜல்லிக்கட்டுக்காக 21 மணிநேரம் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள், மாணவர்களை உடனே விடுதலை செய்து அழைத்து வர கோரி அலங்காநல்லூர், வாடிப்பட்டி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் 21 மணிநேர தொடர் போராட்டத்தை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் முன்னெடுத்தனர். நேற்று காலை முதல் இன்று காலை 6 மணிவரை 21 மணிநேர போராட்டம் நீடித்தது.

ஆனால் போலீசார் தொடர்ந்தும் போராட்டத்துக்கு அனுமதி தராமல் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வாடிப்பட்டி, சோழவந்தான் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திடீரென அலங்காநல்லூர், வாடிப்பட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்களுக்காக போராடியவர் இளைஞர்கள், மாணவர்கள், பெண்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; போராடிய இளைஞர்களுக்கு உணவு கொடுத்ததாக கைது செய்தவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்; அந்த மாணவர்களை அலங்காநல்லூருக்கு அழைத்து வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு மதுரை எஸ்பி விஜயேந்திர பிதாரி உறுதியளித்தார். இருந்தபோதும் மாணவர்களை அழைத்து வரும் வரை போராட்டம் தொடரும் என்பதில் அலங்காநல்லூர் மக்கள் உறுதியாக உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications