ஹலோ, 'மன்னார் அண்ட் கம்பெனி'யில இருந்து பேசுறோம்.. உங்க ஏடிஎம் பின் நம்பர் சொல்லுங்க!
நெல்லை: வங்கி ஏ.டி.எம் கார்டில் உள்ள எண்களையும், ரகசிய எண்களையும் (பின் நம்பர்) தெரிவிக்குமாறு செல்போனில் வங்கி அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு கேட்கும் மர்ம அழைப்புகளால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
ஏ.டி.எம் தொடர்பான எந்தத் தகவலையும் வங்கியிலிருந்து கேட்பதில்லை. ஏ.டி.எம் குறித்த விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தனியார் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏ.டி.எம் கார்ட், கிரெடிட் கார்ட் வசதியை அளித்துள்ளன.
வங்கிச் சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வங்கிக்குச் சென்று காத்திருப்பதைத் தவிர்க்க ஏ.டி.எம் சேவை பெரிதும் பயன்படுகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு மர்ம அழைப்புகள் வருகின்றன. அதில் பேசும் நபர் தான் வங்கி அதிகாரி என்றும் உங்களின் ஏ.டி.எம் கார்டு சேவையை நீடிக்க வேண்டும். ஆகவே ஏ.டி.எம் கார்டில் உள்ள எண்களையும், ரகசிய எண்களையும் தெரிவியுங்கள் என்றும் கேட்கிறார். அவரது பேச்சில் சந்தேகமடைந்து அவரது பெயர், விவரங்களைக் கேட்டால் அந்த மர்ம நபர் அழைப்பை துண்டித்து விடுகிறார்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டின் எண்கள் மற்றும் ரகசிய குறியீட்டு எண்களை தொலைபேசியில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications