சுப. உதயகுமார், ஞாநி உட்பட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அனைவருமே டெபாசிட் இழப்பு!!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களான சுப. உதயகுமார், பத்திரிகையாளர் ஞாநி உள்ளிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
16-ஆவது லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் மத்திய சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, நீலகிரி உள்ளிட்ட 24 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் டெபாசிட் கூட பெறவில்லை.

புஷ்பராயன் 26,476
தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் எம்.புஷ்பராயன் அதிகபட்சமாக 26,476 வாக்குகள் பெற்றார்.

சுப. உதயகுமார் 15,314
அணுஉலைக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த கன்னியாகுமரி வேட்பாளர் சுப.உதயகுமார் 15,314 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார். இத்தொகுதியில் அவர் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

புதுச்சேரி..
அதேபோல் புதுச்சேரியில் போட்டியிட்ட வி.ரங்கராஜன் 8,307 வாக்குகள் பெற்று, டெபாசிட் இழந்தார். அவர் அங்கு 7 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஞாநிக்கு 5,729
ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பத்திரிகையாளர் ஞாநி சங்கரன் 5,729 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

அனைத்து இடத்திலும் டெபாசிட்
தமிழகம் மற்றும் புதுவையில் முதல் முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications