"நம்பர் ஒன்" 420 யார் என்பதில்தான் அதிமுகவினரிடையே சண்டை.. திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் பொளேர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உள்ள அனைத்து எம்எல்ஏ-க்களும் 420-க்கள்தான் என்று திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சசிகலாவால் தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று எடப்பாடி தலைமையிலான நிர்வாகிகள் கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

All are 420s in ADMK, says DMK MLA J.Anbalagan

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டியளித்தபோது, எடப்பாடி அணியில் உள்ளவர்கள் 420-க்கள் என்று டிடிவி தினகரன் விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 420 என்ற வார்த்தை தினகரனுக்கே பொருந்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கூறுகையில், அதிமுகவில் உள்ள அனைவருமே 420-க்கள்தான். ஆனால் அதில் யார் நம்பர் ஒன் 420 என்பதில்தான் அதிமுகவினருக்கிடையே போட்டி நிலவுகிறது.

திமுக சார்பில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக சொல்லப்பட்டதற்கும் கமலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK MLA J. Anbalagan says that all admk MLAs are 420s. There is a competition among them that who will be number one 420?
Please Wait while comments are loading...