சென்னை சில்க்ஸ் தீவிபத்து.. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
சென்னை சில்க்ஸ் தீவிபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: தி.நகர் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பல மணி நேரமாக எரிந்துவரும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் தீவிபத்து இடத்தைப் பார்வையிட்ட வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "சென்னை சில்க்ஸ் தீவிபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. கடையின் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை." என்று கூறினார்.

மேலும் அவர் "நானும் தொகுதி எம்பி ஜெயவர்தனும் இங்கேயே இருந்து, முழுமையாக மீட்பு பணி முடிந்த பிறகே செல்வோம். தீ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தீயணைப்புத்துறை முழுமையாக தீ அணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது." என்று கூறினார்.

இதனிடையே சென்னை சில்க்ஸ் கடையின் முதல் தளத்தின் பின்பக்க சுவரை போலீசார் இடித்து தள்ளினர். மேலும் கடையில் உள்ள கேன்டீன் பகுதியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து உட்பகுதியில் சிதறுகின்றன.

10 மணிநேரமாக தீ எரிவதால் தி.நகர் முழுக்க புகை சூழ்ந்துள்ளது. இதனால் தி. நகர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications