வடகிழக்கு பருவமழையால் நிரம்பி வழியும் ஏரிகள்- சென்னையின் தண்ணீர் பஞ்சம் தீர்ந்தது
சென்னை: விடாமல் கொட்டித்தீர்தத கனமழை காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. நிரம்பி வழியும் ஏரிகளைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றனர். குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாது என சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம்அக்டோபர் 28ம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கிய நாள் முதலே தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 9ம்தேதி முதல் தீவிரமடைந்த பருவமழை கொட்டித் தீர்க்கிறது இதுவரை சராசரியாக 38 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏரிகள் நிரம்பின
சென்னை நகரின் குடிநீர் தேவையை செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஆகிய 4 பிரதான ஏரிகள் நிறைவு செய்கின்றன. இதுதவிர வீராணம் ஏரியிலிருந்தும் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியுள்ளன.

தண்ணீர் அளவு எவ்வளவு?
இன்று காலை நிலவரப்படி 140 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி 139 அடியை எட்டியுள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 83.70 அடியை எட்டியது.

கடல்போல மாறிய ஏரிகள்
50.20 அடி கொள்ளளவு கொண்ட நெற்குன்றம் ஏரி 43.80 அடியாக உள்ளது அதேபோல 64.50 அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரி 62 அடியாக நிரம்பி கடல்போல காட்சி தருகிறது.

தண்ணீர் பஞ்சம் தீரும்
நிரம்பி வழியும் ஏரிகளைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றனர். குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் வரும் கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

804 ஏரிகள் நிரம்பின
காஞ்சிபுரத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏரிகள் மழை நீரால் நிரம்பி வருகின்றன. அங்குள்ள 912 ஏரிகளில் இதுவரை 804 ஏரிகள் நிரம்பியுள்ளன.

மூன்று ஏரிகள் நிரம்பின
புயல் மழை காரணமாக கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள சாம்பார்பள்ளம் ஏரி, செம்மலைசிவிலிக்கரடு ஏரி, கொத்தனேரி ஆகிய ஏரிகள் நிரம்பின.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications