பெண் தொண்டர்கள் கண்ணீர் வெள்ளத்தில் 'மிதக்கும்' காவேரி மருத்துவமனை
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதித்த முதல் நாளில் இருந்தே அலை கடல் என திரண்டு வரும் அவர் தொண்டர்களும் பொதுமக்களும் அனைவரும் அறிந்ததே.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதித்த முதல் நாளில் இருந்தே அலை கடல் என திரண்டு வரும் அவர் தொண்டர்களும் பொதுமக்களும் அனைவரும் அறிந்ததே.
இருந்தாலும் இன்று எல்லா நாட்களை விடவும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் பெரிய அளவில் நலிவடைந்து இருக்கிறது. காவேரி மருத்துவமனையில் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று தெரிந்த மக்கள் இவ்வளவு நாள் நாள் இல்லாத அளவிற்கு பெண்கள் கூட்டம் திரளாக உள்ளது.

மிக தொலைவில் இருந்து கூட வயதான பெண்கள் எல்லாம் பயணம் செய்து சென்னைக்கு வந்து கருணாநிதியை பார்த்துவிட மாட்டோமா என்று கதறி அழும் காட்சிகள் பார்ப்போர் மனதை உறைய வைக்கிறது
தெருக்களில் விழுந்து புரண்டு அழும் பெண்களின் கண்ணீரில் காவேரி மருத்துவமனை முழுகி போய் இருக்கிறது என்றால் அது மிகை ஆகாது.
இவ்வளவு பெண்களின் கண்ணீர் கண்டிப்பாக திமுக தலைவர் கருணாநிதியை காப்பாற்றும் என்று முழக்கமிட்டவரே இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications