ராஜேஷ் லக்கானி தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம்- சென்னையில் 9 கட்சி பிரநிதிகள் பங்கேற்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலை ஒட்டி அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சிப் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட 9 கட்சி பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் செலவீனங்கள் பற்றிய ஆலோசனைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் 270 க்கும் மேற்பட்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்தி உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
ஆனால் தேர்தல் கமிஷன் நடவடிக்கையில் அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்து உள்ளனர். அரசியல் கட்சிகளின் விளம்பர படம், சுவரொட்டிகளை அகற்றுவதில் தேர்தல் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக சில கட்சிகள் குற்றம் சாட்டினார்கள்.
இந்த குறைகளை தவிர்க்க தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி அனைத்து கட்சி கூட்டத்தை இன்று கூட்டினார்.
தலைமை செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் குறைகளையும் குற்றச்சாட்டுகளையும் எடுத்துக் கூறினார்கள்.
சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் செய்யப்படும் தேர்தல் பிரசாரம் தேர்தல் செலவில் சேர்க்கப்படுமா? அரசியல் கட்சி அல்லாமல் தனி நபர் செய்யும் பிரசாரம் யார் செலவில் சேர்க்கப்படும் போன்ற கேள்விகளைச் சில கட்சி பிரதிநிதிகள் எழுப்பினார்கள்.
தேர்தல் நடத்தை விதிளை முழுமையாக கடைபிடிப்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ராஜேஷ் லக்கானி கேட்டு கொண்டார். மேலும் தேர்தல் செலவு குறித்தும் அவர் விளக்கினார். அரசியல் கட்சி கணக்கில் சேர்க்கப்படும் செலவுகள், வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் செலவுகள் போன்றவற்றை அவர் விளக்கினார்.
காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் வரை நீடித்தது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், வக்கீல் பிரிவு செயலாளர் கிரிராஜன், காங்கிரஸ் சார்பில் மாநில பொதுச்செயலாளர் எம். ஜோதி, குமாரசாமி மற்றும் ரவீந்திரன், வக்கீல் சந்தோஷ் (தே.மு.தி.க.), சண்முகம், பாக்கியம் (மார்க்சிஸ்டு கம்யூ.), மூர்த்தி (இந்திய கம்யூ.), ரஜினிகாந்த், பாரதிதாசன் (பகுஜன் சமாஜ்கட்சி), ராகவன், பாலச்சந்திரன் (பா.ஜனதா), சாரதி, அபுபக்கர் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications