மாநில கட்சிகள் டெல்லியில் பங்காற்ற வேண்டும்... நான் ரெடி... நீங்க ரெடியா - டெரிக் ஓ பிரையன்
நான் ரெடி.... நீங்க ரெடியா என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் ஸ்டாலினை அழைத்துள்ளார். அனைவரும் கருணாநிதியை வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
சென்னை: பிராந்திய கட்சிகள் டெல்லி அரசியலில் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும். நான் ரெடி... நீங்க ரெடியா என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.டெரிக் ஒ.பிரையன் கேட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும். ஒட்டு மொத்த மேற்கு வங்க மக்களும் கருணாநிதியை வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சட்டசபை வைரவிழாவில் ராகுல், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, உமா அப்துல்லா டெரிக் ஓ பிரையன், நாராயணசாமி, திருநாவுக்கரசர், காதர்மொய்தீன் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
கருணாநிதி என்ற ஆளுமை மிக்க தலைவரை அனைவரும் வாழ்த்தி பேசினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் டெரிக் ஓ பிரையன், தனது பேச்சை தமிழில் உற்சாகமாக தொடங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதி ஆளுமை மிக்க மிகச்சிறந்த தலைவர் அவர் விரைவில் நலம் பெற வேண்டும். மேற்கு வங்கமும், தமிழகமும் பல வழிகளில் ஒன்றுபட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போல, பெண்களின் சக்தியை உணர்ந்த கட்சி திமுக. பெண்களுக்கு கட்சியில் முக்கிய பங்கினை அளித்துள்ளது.
பிராந்திய மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று கருணாநிதி வழியில் மம்தாவும் போராடுகிறார். மாடுகள் விற்பனை தடைக்கு மம்தாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்றும் பிராந்திய கட்சிகள் மத்தியில் கூட்டாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே திரிணமூல் விருப்பம்.
பிராந்திய கட்சிகள் டெல்லியில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்போம். மாநில கட்சிகள் டெல்லி அரசியலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
மாநில கட்சிகள் டெல்லி செல்ல வேண்டும். அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. நான் ரெடி... நீங்க ரெடியா என்று ஸ்டாலினைப் பார்த்து தமிழில் கேட்டார் டெரிக் ஓ பிரையன்.
மேடையில் ராகுல்காந்தியை வைத்துக்கொண்டே சவால் விடும் வகையில் டெரிக் ஓ பிரையன் பேசியது கேட்டு ஸ்டாலின் முகத்தில் எந்த வித பாவனையும் வெளிப்படுத்தாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications