ஆதார் எண் இணைப்பு மற்றும் ரூபே டெபிட் கார்டு: தமிழகத்தில் சிறப்பு முகாம்
தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழு நாளை முதல் டிசம்பர் 2ம் தேதி வரை ஆதார் எண் இணைப்பு மற்றும் ரூபே கார்டு வினியோகம் செய்ய சிறப்பு முகாம் நடத்துகிறது
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட பின்னர் மக்கள் செலவு செய்ய பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். காகிதமில்லாத பண பரிமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. மின்னணு பண பரிமாற்றத்திற்கு தயாராகுங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டை இணைப்பு மற்றும் ரூபே கார்டு வினியோகம் செய்ய சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழு நாளை முதல் டிசம்பர் 2ம் தேதி வரை ஆதார் எண் இணைப்பு மற்றும் ரூபே கார்டு வினியோகம் செய்ய சிறப்பு முகாம் நடத்துகிறது.
இந்த முகாமில் வாடிக்கையாளர், பொதுமக்கள் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ள விண்ணப்பம் அளிக்கலாம். மேலும், ஜன்தன் கணக்குகளில் வினியோகிக்கப்படாமல் உள்ள ரூபே கார்டுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தொழிலாளர்கள் புதிய ஜன்தன் சேமிப்பு கணக்குகளை துவங்க விண்ணப்பங்களை சிறப்பு முகாமில் அளிக்கலாம். எனவே, ஒவ்வொரு வங்கி கிளையிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி ஆதார் எண் இணைப்பு மற்றும் செல்போன் எண் இணைப்பு, ரூபே கார்டுகள் வினியோகம் மற்றும் ஜன்தன் சேமிப்பு கணக்கு தொடங்குவது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், ஆதார் எண் பெற்ற அனைவரும், தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். வங்கி கணக்கு பெற்ற அனைவருக்கும் 'ரூபே டெபிட் கார்டு' வழங்கப் படவுள்ளது. இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்கிறது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications