மாட்டு வண்டியில் மண் அள்ளிட்டுப் போக அனுமதிக்கலாமே.. யாருக்கும் பாதிப்பில்லாமல்.. ராமதாஸ் கோரிக்கை
சென்னை: இயற்கை வளங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச் செல்ல அனுமதிக்கலாம். இதை அரசு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது...
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு பொதுப்பணித் துறை தடை விதித்திருக்கிறது. இது அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் உள்ளிட்ட காவிரிப் பாசன மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடந்த ஓராண்டாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்கப்படவில்லை. அதற்குப் பிறகும் காஞ்சிபுரம், மற்றும் வேலூர் மாவட்டங்களில் பாலாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த மாவட்டங்களிலும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆறுகளில் மணல் அள்ள பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்து இருப்பது தான் இதற்குக் காரணம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஆறுகளில் மாட்டு வண்டிகளின் மூலம் மணல் அள்ளுவது காலம்காலமாகவே அனுமதிக்கப்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு இறுதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்பணித் துறையினரிடம் உரிமம் பெற்று ஒரு வண்டி மணல் ரூ. 60 என்ற விலையில் மாட்டு வண்டிகள் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது. சிறிய அளவில் வீடு கட்டுபவர்கள், வீடுகளில் மராமத்துப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு குறைந்த அளவில் மணல் கிடைத்தாலே போதுமானது.
மேலும், இவர்களால் அதிக விலை கொடுத்து சரக்குந்து மணலை வாங்க முடியாது என்பதால், மாட்டு வண்டி மணலை வாங்கிவந்தனர். இதன்மூலம் இரு தரப்பினருமே பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் வண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் பல மாதங்களாக கடுமையான வறுமையில் வாடுகின்றன. அதுமட்டுமின்றி, சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளும் தடை பட்டிருக்கின்றன.
ஆறுகளில் மணல் அள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆகஸ்ட் மாதம் தடை விதித்தது. ஆனாலும் உரிய துறைகளிடம் அனுமதி பெற்று மணல் அள்ளிக்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் சரக்குந்துகளில் ஆற்றுமணலை அள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையால் தான் மாட்டுவண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுவது நம்பும்படியாக இல்லை.
ஆற்றுப் படுகைகளில் குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் மணல் அள்ளக் கூடாது; மணல் அள்ளுவதற்கு எந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றங்களே நிபந்தனைகள் விதித்தும், அதையெல்லாம் மதிக்காமல் மணல் கொள்ளையர்கள் சரக்குந்துகளில் மணலை அள்ளிச் செல்கின்றனர்.
இதையெல்லாம் வேடிக்கைப் பார்க்கும் தமிழக அரசு அன்றாட பிழைப்புக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளும் தொழிலாளர்களுக்கு தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகவே இப்படி ஒரு நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து விற்பதை தொழிலாக கொண்டுள்ளனர். காரணமே இல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை அரசு பறிக்கக் கூடாது. சரக்குந்துகளில் மணல் எடுக்க கொள்கை வகுக்கப்பட்டிருப்பதைப் போலவே, வண்டிகளில் மணல் அள்ளவும் கொள்கை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் வண்டிகளில் மணல் அள்ள அரசு அனுமதிக்க வேண்டும். ஒருவேளை, வண்டிகளில் மணல் அள்ள பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருந்தால் அதையும் நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications