அமேசானில் விற்பனை செய்யப்படும் வறட்டி... விலை எவ்வளோ தெரியுமா?
அமேசானில் மாட்டு வறட்டி விற்பனைக்கு வந்துள்ளது. அதன் விலை ரூ.199. மொத்தம் 9 வறட்டிகள் கிடைக்கும்.
சென்னை: அமேசானில் கிராமங்களில் கிடைக்கும் மாட்டு வறட்டி விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.199. ஆர்டர் செய்தால் போதும் வீட்டுக்கே வந்துவிடும்.
மாட்டு சாணத்திலிருந்து தயாரிக்கப்படுவது வறட்டியாகும். இது அடுப்பெரிக்க பயன்படுகிறது. மாட்டு சாணம், கோமியம் ஆகியவை கிருமி நாசினியாகும்.

மேலும் மாட்டு சாணத்தை காயவைத்து எடுப்பது வறட்டி. இது புனிதமான பொருள் என்பதால் ஹோமம்,தெய்வங்களுக்கு பொங்கல் வைத்தல் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுகிறது.
பொதுவாக கிராமங்களிலும், நகரங்களிலும் இது கிடைக்கும். ஆனால் சென்னை உள்ளிட்ட மெட்ரோ பாலிட்டன் நகரங்களில் ஹோமம் செய்வதென்றால் மாட்டு வறட்டி தேவை. அதை மக்கள் தேடி அலைவர்.
மக்கள் வீட்டுக்குள் இருந்தபடியே செல்போன் முதல் காது கொடையும் பட்ஸ் வரை அனைத்து கிடைக்கிறது. எலக்ட்டிரிக்கல், எலக்ட்ரானிக்கல் பொருள்கள் என சைக்கிள், குழந்தைகளுக்கான ஸ்கூட்டர் உள்ளிட்டவை கிடைக்கும்.
அதுபோல் இந்த வறட்டியும் தற்போது அமேசானில் கிடைக்கிறது. 9 எண்ணிக்கை கொண்ட அந்த வறட்டியின் விலை ரூ.199 ஆகும். ஆன்லைனில் பணம் செலுத்தியோ அல்லது பொருள் வரும் போது செலுத்தும் கேஷ் ஆன் டெலிவரியும் செய்யலாம்.












Click it and Unblock the Notifications