கலிகாலத்தின் ஆரம்பம்தான் கொரோனா.. 7 மாதங்கள் கழித்தே முடிவு.. ஆம்பூரில் பெண் அருள்வாக்கு- வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆம்பூர்: கொரோனா வைரஸ் 7 மாதங்களுக்கு பிறகே இந்த உலகை விட்டு செல்லும் என ஆம்பூரில் பெண் ஒருவர் அருள்வாக்கு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Recommended Video

    கொரோனாக்கு 7 மாதங்கள் கழித்தே முடிவு.. ஆம்பூரில் பெண் அருள்வாக்கு - வீடியோ

    கொரோனாவால் உலகம் முழுவதும் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். இதற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் சந்தித்து வருகிறார்கள்.

    இந்த நோய் எப்போது கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்த்து வரும் நிலையில் ஆம்பூரில் ரயில்நிலையம் அருகே ஒரு பெண் அருள்வாக்கு கூறுகையில் இந்த நோய் 7 மாதங்கள் கழித்துதான் போகும் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    7 மாதத்திற்கு பிறகே முடிவு

    7 மாதத்திற்கு பிறகே முடிவு

    இதுகுறித்து அருள்வாக்கு வந்த பெண் கூறுகையில், இந்த சுற்றுப்புற சூழலிலே இந்த நகராட்சியிலே பல உயிர்களை பலிவாங்குவேன். கொள்ளை நோயை நாங்கள் உருவாக்கினோம். கலியுகத்தின் ஆரம்பமடி இது. கலியுகம் தொடங்கினால் இதைவிட பேரழிவே. இது ஆரம்பத்தின் அறிகுறி. இன்னும் 7 மாதத்திற்கு பிறகே ஒரு முடிவு வரும் அதற்கான மருந்தும் வரும்.

    பரம்பொருள்

    பரம்பொருள்

    இப்போது இந்த நோய் உலகை விட்டு போகாது. இது கடவுளின் ஈசானின் என் பரம்பொருளின் படைப்பில் உண்டான சூட்சமம். என் நாதனின் சூட்சமம். என் 16 கைகளும் உனக்கு அருள்பாலிக்கும். நான் அங்காள பரமேஸ்வரி, பத்ரகாளி, 10 தலை நாகமடா. 7 மாதத்திற்கு பிறகே இதற்கு ஒரு முடிவு. பாவிகள் அதிகரித்துவிட்டனர். பொய், திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு, கொலை அதிகரித்துவிட்டன.

    மனிதர்கள்

    மனிதர்கள்

    உன்னை நான் சோதித்தால் இன்னொருவன் திருந்துவான். என் ஆலயத்திலே உனக்கு மட்டும் வேதனை இருக்கிறது என நீ கூறுகிறாயே. நான் குடியிருக்கும் அனைத்து சன்னதியிலும் பூஜை செய்யவில்லை. கற்பூரம் ஏற்றவில்லை. மனிதர்களாகிய நீங்கள் எங்கள் சினத்தை சீண்டிவிட்டீர்கள்.

    மஞ்சள் நீர்

    மஞ்சள் நீர்

    மேற்கு திசையில் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் இந்த நோய் பரவுமடா. அது கடவுளின் செயலால் உருவாக்கப்பட்டது. மனிதர்களின் செயலால் அந்த நோயை அழிக்க முடியாது என கூறிவிட்டு மஞ்சள் நீரை குடித்துவிட்டு மலையேறிவிட்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+