எல்லாவற்றையும் உளறி கொட்டிவிடுகிறார்களே... அமித்ஷாவின் தமிழக பயணம் ரத்தின் பரபர பின்னணி
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீரென ரத்தானதற்கு காரணமே அக்கட்சியின் தமிழக தலைவர்கள்தான் என கூறப்படுகிறது.
சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமே தமிழக பாஜக தலைவர்கள் மீதான அதிருப்திதான் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். தமிழிசையின் நியமனம் மூலம் நாடார் சமூக வாக்குகளை தம் பக்கம் கொண்டுவர முடியும் என கருதியது டெல்லி பாஜக மேலிடம்.
ஆனால் வெறும் பேச்சுமட்டும்தான் என்கிற நிலையில் இருக்கிறார் தமிழிசை. இதனால் அவரை மாற்றுவதில் நீண்டகாலமாக முனைப்புடன் இருக்கிறது டெல்லி மேலிடம்.

தமிழக பயணம்
தற்போது தமிழகத்தில் அதிமுக உடைந்து சிதறியுள்ள நிலையில் இதை சாதகமாக பயன்படுத்த நினைக்கிறது டெல்லி பாஜக மேலிடம். இதற்காகவே வரும் 10-ந் தேதியன்று தமிழகத்துக்கு அமித்ஷா பயணம் மேற்கொள்ள இருந்தார்.

ஆதாயம் தேடும் முயற்சி
ஆனால் தமிழக பாஜக தலைவர்களோ, அமித்ஷாவின் வருகையை பயன்படுத்தி 'ஆதாயம்' தேட தொடங்கினர். பசையுள்ள ஜாதி கட்சி தலைவர்கள், தொழிலதிபர்களை அமித்ஷாவுடன் சந்திக்க வைக்கும் பேரங்கள் படு மும்முரமாக நடந்து வந்தது.

அப்செட் அமித்ஷா
அத்துடன் அமித்ஷாவே நாங்க சொல்லித்தான் எல்லாவற்றையும் செய்கிறார் என்கிற தோரணையிலும் தமிழக பாஜக தலைவர்கள் செயல்பட்டு வந்தனர். இந்த தகவல்களை கேள்விபட்ட அமித்ஷா படு அப்செட்டாயிருக்கிறார்.

செம டோஸ்
உடனடியாக தமிழிசை சவுந்தரராஜனை போனில் அழைத்து, மைக் கிடைக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் உளறி கொட்டுவீங்களா? என்னுடைய பயணத்திலும் கூட இப்படி ஆதாயம் தேட முயற்சிப்பீங்களா? என செம டோஸ் விட்டிருக்கிறார். அத்துடன் தமது தமிழக பயணத்தையும் ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார் அமித்ஷா என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications