சிதம்பரம் நடராஜ பெருமாளை தரிசித்த பாஜக தலைவர் அமித் ஷா
சிதம்பரம்: பாஜக தலைவர் அமித் ஷா சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தார். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இரவு பொழுதை கழித்தார். பின்னர் இன்று காலை கார் மூலம் திண்டிவனம் வழியாக சிதம்பரம் சென்றார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற அமித் ஷாவை கோவில் தீட்சிதர்கள் கும்ப மரியாதை செய்து வரவேற்றனர். பின்னர், கோவிலுக்குள் சென்ற அவர் நடராஜர், கோவிந்தராஜபெருமாள் சன்னதிகளில் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து கோவிலை முழுமையாக வலம்வந்து அம்பாள், தாயார் சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் நடைபெறும் உற்சவ விபரங்களை தீட்சிதர்கள் அவரிடம் தெரிவித்தனர்.
அமித் ஷாவுடன் பாஜக நிர்வாகிகளும் வந்திருந்தனர். கோவிலில் இருந்து அமித் ஷா கார் மூலம் புதுச்சேரி புறப்பட்டு சென்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக!












Click it and Unblock the Notifications