வந்துருச்சுடோய் "அம்மா" ஹெல்மெட்!
சென்னை: இது ஹெல்மெட் காலம்.. அதாவது ஹெல்மெட் குறித்து மக்கள் எல்லாம் பரபரத்து, வெடவெடத்துத் திரியும் காலம். இதை வைத்து அதிமுகவினர் சிலர் அலப்பறையை ஆரம்பித்து விட்டனர்.
ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவை கட்டாயம் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் டூவீலர் வைத்திருப்போர் எல்லாம் பழைய ஹெல்மெட்டை தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர். அது இல்லாமல் ஹாயாகப் போனவர்கள் எல்லாம் புது ஹெல்மெட்டுக்காக கடை கடையாக உலா வந்தவண்ம் உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் அம்மா ஹெல்மெட் உலா வர ஆரம்பித்துள்ளது. வாட்ஸ் ஆப்பில் இந்தப் படம்தான் இப்போது ஹாட்

வெள்ளை நிறத்தில் ஒரு ஹெல்மெட்
வெள்ளை நிற ஹெல்மெட்டில் ஜெயலலிதா படத்தைப் போட்டு அம்மா ஹெல்மெட் என்று கலகலக்க வைத்துள்ளனர் சில கில்லாடிகள்.

முன்பக்கம் நாடாளுமன்றம்
ஹெல்மெட்டின் முன்பக்கம் நாடாளுமன்றப் படத்தைப் போட்டு அதற்கு மேலே ஜெயலலிதாவின் படம் உள்ளது. அதற்கும் மேலே அம்மா 68 என்று எழுதியுள்ளனர்.

நாடாளுமன்றத்திற்குக் கீழே
நாடாளுமன்றத்திற்குக் கீழே தலைக்குக் கவசம் HELMET இந்தியாவிற்கு கவசம் AMMA என்று எழுதியுள்ளனர்.

பின்னாடியும் அதே அதே
பின்னாலும் ஜெயலலிதா படமும், இதே வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்றப் படம் மட்டும் மிஸ்ஸிங்.

சைடில் இரட்டை இலை
இருபக்க பக்கவாட்டிலும் இரட்டை இலையைப் பொறித்துள்ளனர். புதிதாக வாங்கிய ஹெல்மெட்டில் இப்படி பிரிண்ட் செய்துள்ளனர் என்று தெரிகிறது.

இலவச ஹெல்மெட் வருமா
இந்த ஹெல்மெட்டைப் பார்த்து சைதை துரைசாமியோ அல்லது வேறு யாருமே இலவச அம்மா ஹெல்மெட் ஐடியாவைக் கொடுத்து ஹெல்மெட் வழங்க வைத்தால் ஏழை டூவீலர்களுக்கு உதவியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications