அம்மா உணவகங்கள் என்ற டுபாக்கூர்.. வெள்ளத்தில் கூட உதவாத சுய விளம்பர உணவங்கள்!
சென்னை: ஊருக்கு பத்து அம்மா உணவகங்கள் என்ற பெயரில் ஹோட்டல்களை திறந்துவிட்டு, தமிழகத்தின் பசியை போக்கிவிட்டதாக நடைபெற்ற பிரச்சார சாயத்தை, இந்த மழை வெளுக்க வைத்துவிட்டது.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளிலும், பாலும், தண்ணீரும் கூட இன்னும் உருப்படியாக போய் சேரவில்லை என்ற கூக்குரல்கள் ஒலிக்கின்றன. அப்படியிருக்கும்போது உணவு பொருள் தட்டுப்பாடு பற்றி சொல்ல தெரிய வேண்டியதில்லை.
இந்த நேரத்தில்தான், உணவு பஞ்சத்தை போக்க வந்த பசுமை புரட்சிக்கு ஈடாக, உசுப்பேற்றப்பட்ட அம்மா உணவகங்கள் பக்கம் மக்கள் கவனம் செல்கிறது.

ரிப்பீட்
இந்த இடர்பாட்டு காலத்திலும்கூட, அம்மா உணவகங்கள் கீ கொடுத்த பொம்மை போல, தனது வழக்கமான பணிகளை மட்டுமே செய்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கடமைக்காக வேலை
நாள் ஒன்றுக்கு, காலையில் சில நூறு பேருக்கு இட்லி, மதியம் சில நூறு பேருக்கு சாப்பாடு போட்டுவிட்டால் நமது கடமை முடிந்தது, என்ற ரீதியில்தான், அம்மா உணவகங்கள் இப்போதும் செயல்பட்டுவருவதாக சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கும் வெள்ளம் பாதித்த சென்னைவாசிகள் கூக்குரல் எழுப்புகிறார்கள்.

வார்டுக்கு ஒன்று இருக்கே
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகர பகுதியில், மொத்தம், 252 அம்மா உணவகங்கள் உள்ளன. ஒவ்வொரு வார்டுக்கும் தவறாமல் ஒரு அம்மா உணவகம் வந்துவிட்டது. அப்படியிருந்தும், ஒரு மழைக்கே, பசி, பட்டினி என்ற கூக்குரல்தான் தலைநகரில் எதிரொலிக்கிறது.

கூடுதல் நேரமில்லை
இதற்கு காரணம், அம்மா உணவகங்கள் தனது சாப்பாடு வழங்கும் அளவை அதிகரிக்காததுதான். வழக்கம்போலவே அவை குறிப்பிட்ட நேரத்துக்கு திறந்து, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே சாப்பாடு வழங்கிவருகின்றன.

திறக்கவில்லை
இந்த உணவகங்களை பகல், இரவு என முழு நேரமும் திறந்துவைத்து, தேவைப்படும் அளவுக்கு, உணவு பதார்த்தங்களை வினியோகித்திருந்தால், வார்டுதோறும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருமே உணவு பெற்றிருக்க முடியும்.

ஹோட்டலை சுற்றி வெள்ளம்
நகரின் பல அம்மா உணவகங்களை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கியிருந்ததால் பல ஹோட்டல்களால் செயல்பட முடியாமலும் இருந்தது. போர்க்கால அடிப்படையில் அந்த வெள்ளத்தை அகற்ற மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சாயம் வெளுத்தது
தமிழகத்தின் உணவு தட்டுப்பாட்டை தீர்க்க வந்த திட்டம் என்று பெரும் அளவுக்கு உசுப்பேற்றப்பட்ட திட்டம் ஒரு மழைக்கே, சாயம் வெளுத்து நிற்பது பரிதாபமே.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரையுலகில் வெடித்த பிரச்சனை.. முதல்வரிடம் புகார் அளித்த திரிஷ்யம் பட நடிகை.. பின்னணி காரணம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications