அதிமுக-வின் ‘அம்மா வாய்ஸ்’: ஒரே நாளில் 1 லட்சம் தொலைபேசி அழைப்புகள்
சென்னை: தேர்தலை முன்னிட்டு அதிமுக-வால் தொடங்கப்பட்டுள்ள ‘அம்மா வாய்ஸ்' சேவையை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனராம்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் புதுப்புது சேவைகளை தங்கள் இணையதளத்தில் அவை அறிமுகம் செய்து வருகின்றன.
சமூகவலைத்தளங்கள் மூலம் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளன. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணையதள உபயோகிப்பாளர்களை கவர்ந்திழுக்க பல்வேறு உத்திகளையும் அரசியல் கட்சிகள் கையாண்டு வருகின்றன.
இந்தவரிசையில், அதிமுக-வும் முழுமுனைப்போடு பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்

ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை
திராவிடக் கட்சிகளிலேயே முதல்முறை யாக, ஆன்லைனில் (aiadmk.com) கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் திட்டத்தை அதிமுக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.

40000 உறுப்பினர்கள்
இதில், குறுகிய காலத்திலேயே 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அவர்கள் நேரில் வராமலேயே, இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து, உறுப்பினர் அட்டையை ‘பிரின்ட்' எடுத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

பெறும் வரவேற்பு
வழக்கமாக, கட்சி உறுப்பினராக சேர, குறைந்தது 20 பேரையாவது குழுவாகச் சேர்த்துக் கொண்டு உள்ளூர் கட்சித் தலைவர்களிடம் கையெழுத்து வாங்கி மனு செய்யவேண்டும். உறுப்பினர் அட்டையை பெற ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருக்கவேண்டும். ஆனால், இதில் உடனே பெறமுடியும் என்பதால் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வாட்ஸ் ஆப்-ல் 10 லட்சம் பேர்
இளைஞர்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள ‘வாட்ஸ் ஆப்' செயலியில் முதல்வரின் சாதனைகள் அடங்கிய வீடி யோக்களைப் பெறும் சேவை, கட்சியின் இணையதளத்தில் அறிமுகப்படுத் தப்பட்டது. இது அறிமுகப்படுத்தப் பட்ட சில மாதங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாகியுள்ளனர். அவர்களுக்கு அதிமுக பற்றிய தகவல்கள் தினசரி அனுப்பப்பட்டுவருகின்றன.

அம்மா வாய்ஸ்
இதுதவிர, டயல் செய்தால் (9543778899) முதல்வரின் பேச்சுக்களை கேட்கலாம் (அம்மா வாய்ஸ்) என்ற சேவை, புதன்கிழமை அறிமுகப்பட்டுள்ளது. அந்த வசதியைப் பயன்படுத்தி ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், முதல்வரின் பேச்சுக்களை கேட்டிருக்கிறார்கள் என அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications