ஸ்டிக்கர் ஒட்டுவதில் அதிமுகவினர் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை! குதிரைக்கும் அம்மா ஸ்டிக்கர் !!
கோவை: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட யாகத்துக்கு அழைத்து வரப்பட்ட குதிரையின் நெற்றியில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர் அதிமுகவினர்.
வெள்ள நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டி எதிர்ப்புக்கு ஆளான அதிமுகவினர் இப்போது எங்கும் எதிலும் ஸ்டிக்கர் மயம் என்றாக்கிவிட்டனர். அதிலும் கோவை மாவட்டத்தில் நடைபெறும் அதிமுக நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் ஸ்டிக்கருக்கு பஞ்சம் இல்லை என்று கூறும் அளவுக்கு அதிமுகவினர் அமக்கலப்படுத்துகின்றனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழாவையொட்டி கோவை சரவணம்பட்டியில் உள்ள ரத்தினகிரி குமரக்கடவுள் கோவிலில் சிறப்பு படி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அசுவமேத யாகமும் நடைபெற்றது. யாகத்துக்கு குதிரைகளும் அழைத்து வரப்பட்டன. அப்போது குதிரையின் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நெற்றிப்பட்டையும் கட்டப்பட்டிருந்தது.
சமீபத்தில் கோவையில் ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி 68 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் மணமக்களுக்கு கட்டில், பீரோ, மெத்தை, பாத்திரங்கள் உள்பட 68 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

கூடவே அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நெற்றிப்பட்டையும் மணமக்களுக்கு கட்டப்பட்டது. தற்போது குதிரையிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. வரும் 24-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரின் பிறந்த நாள் வருகிறது. அதற்குள் இது போன்று எத்தனை காட்சிகளை பார்க்கப் போகிறோமோ? என்று பொதுமக்கள் புலம்பினர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications