ஒரு அம்மா உணவகத்திற்கு 12 மகளிர் குழு உறுப்பினர்கள்.. சப்பாத்தி, பருப்புக் கடைசல் பயிற்சிக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் மகளிர் குழுக்களைச் சேர்ந்த 12 பெண் உறுப்பினர்களை நியமித்து அவர்களுக்கு சப்பாத்தி, பருப்புக் கடைசல் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு சப்பாத்தி தயார் செய்ய்படுவதாக சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

சப்பாத்தி தயார் செய்யும் மெஷினுக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் தற்போது மேனுவலாகவே சப்பாத்தி போடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக மகாராஜா ஹாட் ஜிப்ஸ் நிறுவனத்தினரிடம் சப்பாத்தி தயார் செய்யும் மெஷினுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆஐனால் குறிப்பிட்ட நேரத்தில் அது டெலிவரி ஆகாததால் தற்போது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்டதாம்.

இதுகுறித்து மாநகராட்சி கூட்ட மன்றத்தில் சிறப்புத் தீர்மானம் மூலம் சைதை துரைசாமி தெரிவித்ததாவது...

அம்மா உணவகங்களில் சப்பாத்தி

அம்மா உணவகங்களில் சப்பாத்தி

அம்மா உணவகங்களில் விரைவில் சப்பாத்தி வினியோகம் தொடங்க வேண்டியதின் அவசியம், கருதி, 14 நவீன சப்பாத்தி தயாரிக்கும் எந்திரங்களில் 9 நவீன சப்பாத்தி தயாரிக்கும் எந்திரங்களுக்கான பட்டி தொகை ரூ.1 கோடியே 32 லட்சத்து 93 ஆயிரத்து 450 தீர்வு செய்து, ஒப்பந்தக்காரருக்கு (மகாராஜா ஹாட் சிப்ஸ் உரிமையாளர்) வழங்கப்பட்டது.

சொன்னபடி தரவில்லை

சொன்னபடி தரவில்லை

ஒப்பந்தக்காரர் ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டபடி, சென்னை மாநகராட்சிக்கு எந்திரங்களை வழங்காததால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

90 நாட்களுக்குள் பணம் ரிட்டர்ன்

90 நாட்களுக்குள் பணம் ரிட்டர்ன்

வழங்கப்பட்ட பட்டித்தொகை முழுவதையும் 90 நாட்களுக்குள் திரும்ப செலுத்துவதாக அவர் உறுதி அளித்து உள்ளார்.

கையிலேயே சப்பாத்தி போடலாம்

கையிலேயே சப்பாத்தி போடலாம்

இந்த குறைபாட்டை போக்க தற்போது கையிலேயே சப்பாத்தி தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தலா 12 பெண்கள்

தலா 12 பெண்கள்

மேலும் ஒரு அம்மா உணவகத்திற்கு 12 மகளிர் குழு உறுப்பினர்கள் வீதம் சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு, சப்பாத்திகள் தயார் செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார் மேயர்.

மாலை நேரங்களில் சப்பாத்தி

மாலை நேரங்களில் சப்பாத்தி

தற்போது அம்மா உணவகங்களில் மா்லை நேரத்தில் சப்பாத்தி வழங்கப்படுகிறது, கூடவே தொட்டுக் கொள்ள பருப்புக் கடைசலும் தரப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+