முதுபெரும் தலைவர் கருணாநிதி மறைவுக்கு வருத்தம்.. டிடிவி தினகரன் இரங்கல்
தமிழகத்தின் முதுபெரும் தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி மிகவும் வருத்தம் தருகிறது என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் முதுபெரும் தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி மிகவும் வருத்தம் தருகிறது என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருத்தம் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், "தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தலைசிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை தருகிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications