சென்னை அசோக் நகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் திறப்பு
சென்னை அசோக் நகரில் அமமுக தலைமை அலுவலகத்தை டி.டி.வி தினகரன் திறந்து வைத்து கொடியேற்றினார்.
சென்னை : அமமுக சார்பில் நாங்கள் விரைவில் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னையில் திறந்துவைத்து உரையாற்றினார்.
சென்னை அசோக் நகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. அதை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கொடியேற்றி திறந்துவைத்தார்.

அப்போது அங்கிருந்த தொண்டர்களிடம் அவர் பேசுகையில், அசோக் நகர் அலுவலகம் இனி அமமுகவின் தலைமை அலுவலகமாகத் திகழும். இனி தமிழகத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும், நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.
அமமுகவிற்கு அலுவலகம் அமைக்க சென்னையில் யாருமே இடம் தராத போது, முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா இடம் கொடுத்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அதிமுகவின் 70% தொண்டர்கள் அமமுகவிற்கே ஆதரவாக உள்ளனர். விரைவில் அசோக் நகரில் இருந்து ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று அமமுக கொடியேற்றும். அம்மாவின் உண்மையான வாரிசுகள் நாங்கள்தான் என்பதை விரைவில் நிரூபிப்போம் என்றார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications