என்னாது ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்காக நடிகை எமி ஜாக்சன் 'தொப்பியுடன்' பிரசாரமா?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரபல நடிகை எமிஜாக்சன் தொப்பியுடன் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளதால் அங்கு பிரச்சாரம் காலை மாலை என தூள் பறந்து வருகிறது.
திமுக, அதிமுக அம்மா கட்சி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி, சிபிஎம், பாஜக ஆகிய கட்சிகள் ஆர்.கே. நகரின் தேர்தல் களத்தில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

அதிமுக இரண்டாக பிளந்து அதிமுக அம்மா கட்சியாகவும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியாகவும் களத்தில் போட்டியிடுவதால் தங்களது பலத்தை காட்ட அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்.
காலை 6 மணிக்கெல்லாம் ஆர்.கே. நகரில் தொப்பியோடு ஆஜராகிவிடும் டிடிவி தினகரன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது மானப்பிரச்சனை என்று கருதுவதால் தனக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரத்தை களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இதனால், மதராசபட்டணம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, 'ஐ' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் எமி ஜாக்சனை பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தொப்பி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டதாகவும் சசிகலா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதற்காக மதரசாப் பட்டிணம் திரைப்படத்தில் தொப்பி அணிந்து கலக்கலாக நடித்த தோன்றிய எமி ஜாக்சனை சிங்கப்பூரில் உள்ள தினகரனின் நண்பர் மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிமுக அம்மா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications