ஏ.என்.32 மாயமான இடத்தில் 2 பொருட்கள் கண்டெடுப்பு: விமான பாகங்களா?
சென்னை: மாயமான ஏ.என். 32 ரக விமானத்தை தேடும்போது வங்கக் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பொருட்கள் கிடைத்தன.
சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படைத்தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானுக்கு கிளம்பிய விமானப்படை விமானம் ஏ.என். 32 மாயமாகி 5 நாட்கள் ஆகிவிட்டது. விமானம் வங்கக் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு தேடும் பணி நடந்து வருகிறது.

விமானத்தை தேடும் பணியில் 13 கடற்படை கப்பல்கள், 2 கடலோர காவல்படை கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால் இதுவரை விமானம் பற்றி ஒரு விபரமும் தெரியவில்லை. விமானத்தில் இருந்தவர்களின் நிலை தெரியாமல் அவர்களின் குடும்பத்தார் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் விமானத்தை தேடும் பகுதியில் 2 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆரஞ்சு நிறத்தில் இருந்த அவை விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆய்வில் அவை விமானத்தின் பாகங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
