மகேந்திரகிரி இஸ்ரோ மையம் மீது அடிக்கடி பறக்கும் குட்டி விமானம்.. அலட்சியமாக இருக்கும் அரசுகள்
வள்ளியூர்: மகேந்திரகிரி மலைப்பகுதியில் இஸ்ரோ மையம் மீது குட்டி விமானம் மீண்டும் பறந்ததையடுத்து 2 ஆவது நாளாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கட்டுப்பாட்டில் உள்ள திரவ இயக்க திட்ட மையம் கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மகேந்திர கிரி மலையில் உள்ளது.
மகேந்திரகிரி திரவ இயக்க மையம் தற்போது விண்வெளி ஆய்வில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மத்திய அரசினால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மகேந்திர கிரி திரவ இயக்க மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இந்த மையப்பகுதிக்குள் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் புகுந்தார். இவர் மலையில் திரவ இயக்க மையத்தின் முக்கிய பகுதிகளை ரகசியமாக கண்காணித்த வண்ணம் காமிராவுடன் சென்றுள்ளார். இதை வனப்பகுதியில் ரோந்து சென்ற வன ஊழியர்கள் கண்டுபிடித்து அவனை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
திரவ இயக்க திட்ட மைய அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பணகுடி போலீசாரும் விசாரித்தனர். இந்த நிகழ்வை தொடர்ந்து திரவ இயக்க திட்ட மையத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆராய்ச்சி மையத்திலும், சுற்றுப் பகுதியிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வீரர்கள் சுற்றி வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில், ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள மலைப்பகுதியின் மேலே சிறிய விமானம் ஒன்று பறந்து உள்ளது. அந்தப் பகுதியை 3 முறை வட்டமடித்த அந்த விமானத்தில் இருந்து சப்தம் வரவில்லை என கூறப்படுகிறது. விமானத்தின் கீழ் பகுதியில் 7 சிவப்பு விளக்குகளும், ஒரு பச்சை விளக்கும் எரிந்து உள்ளன.
ஆராய்ச்சி மையம் மலைப்பகுதியில் வடக்கு, தெற்காக வட்டமடித்த அந்த விமானம் தூத்துக்குடியை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி பொதுமக்கள் பலரும் நேற்று காலையில் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து, வனத்துறையினரும், பணகுடி போலீசாரும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள வனப்பகுதியில் சூறாவளி ஊத்து என்ற பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
மலைப்பகுதியில் உள்ள கஞ்சிப்பாறை, குன்னிமுத்து சோலை என்ற இடம்வரை போலீசார், வனத்துறை சோதனை நடத்தினர். அப்போது விமானம் வந்து இறங்கியதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. நள்ளிரவு வரை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நள்ளிரவு மீண்டும் கிளைடர் விமானம் பறந்தது. விளக்கு ஒளியுடன் விமானம் பறந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளார்கள். பாதுகாக்கப்பட்ட இந்த பகுதியில் மீண்டும் விமானம் பறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நவீன உபகரணங்கள் மூலம் வான்வெளியையும் கண்காணிக்க வேண்டியது அவசியம் என அப்பகுதியினர் கூறுகின்றனர். நுழைவுப் பகுதியில் மட்டும் கெடு பிடியாக உள்ள பாதுகாப்பு ஊழியர்கள் ஒட்டுமொத்த திரவ இயக்க திட்ட மைய பாதுகாப்பு விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்கள் ஆய்வு மைய அதிகாரிகள். குட்டி விமானம் பறந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications