நாமெல்லாம் "மாம்பழம்" சாப்பிடலாமா.. ஆஹா... கிளம்பிருச்சுய்யா சர்ச்சை!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் தயாரித்து வெளியிட்டுள்ள அனிமேஷன் படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் பாமகவின் மாம்பழச் சின்னம் இடம் பெற்றுள்ளதாக கூறி அந்த படத்தை மாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துளளன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்காளர்களைக் கவர விதம் விதமான உத்திகளை பயன்படுத்தி அசத்தி வருகிறது.
இது மீம்ஸ் போட்டுத் தாக்கும் காலம் என்பதால் அந்தப் பாணியிலும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.

அனிமேஷன் படம்
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக Appeal to young voters என்ற பெயரில் ஒரு அனிமேஷன் படத்தை தயாரித்து வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

மாந்தோப்பில்
இந்த அனிமேஷன் படத்தில் ஒரு மாந்தோப்பில் சிறார்கள் விளையாடிக் கொண்டுள்ளனர். அப்போது அவர்களிடையே நடைபெறும் உரையாடலை வைத்து காட்சிகள் அமைந்துள்ளன.

மாம்பழம் சாப்பிடலாமா?
சிறார்கள் மாமரம் ஒன்றில் ஏறிக் கொண்டு மாம்பழங்களைப் பறிக்கிறார்கள். பின்னர் இது சாப்பிடும் நேரம். நாமெல்லாம் மாம்பழம் சாப்பிடலாமா என்று கேட்கிறார்கள். இதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதெப்படி சொல்லலாம்
இதுகுறித்து பலவேறு கட்சிகளும் புகார் கிளப்பியுள்ளனவாம். மாம்பழம் என்பது பாமகவின் தேர்தல் சின்னம். எனவே அதைப் பிரபலப்படுத்துவது போல இந்தக் காட்சிகள் உள்ளன. எனவே இதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கட்சிகள் கோரியுள்ளன.
இலையும் இருக்கேய்யா!
அட, அந்த இடத்தில் மாம்பழம் மட்டுமா இருக்கு.. மரம் நிறைய "இலை"யும் நிறைய இருக்கே... அதை விட முக்கியமாக "பச்சை"க் கலர் ஜாஸ்தியாவே இருக்கு.. அதையும் சுட்டிக் காட்டிச் சொல்லுங்க கட்சிகளே!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications