நள்ளிரவில் பழ.கருப்பையா வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழ. கருப்பையா வீட்டை மர்ம நபர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பழ.கருப்பையா வீட்டின் மீது கற்களை வீசிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.கவைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இந்நிலையில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதையடுத்து தன்னுடைய எம்.எல்.ஏ பதவியினை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் கருப்பையா.
இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டின் மீது இந்த கற்கள் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலையடுத்து, "ராயப்பேட்டையில் எனது வீட்டினைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பழ.கருப்பையா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் பழ.கருப்பையா அதிமுகவில் இருந்த போதே ஒருமுறை இதுபோன்று அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications