விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸில் அசத்தல் நடனம் ஆடிய ஆனந்தபாபு!
விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆனந்தபாபு நடனமாடினார்.
Recommended Video

சென்னை: விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தனது கலக்கலான நடனத்தால் பார்வையாளர்களை அசர வைத்தார் நடிகர் ஆனந்தபாபு.
கடந்த நான்கு ஆண்டுகளாக விஜய் டிவி, தனது சேனல் நட்சத்திரங்களைப் பாராட்டி, கவுரவிக்கும் விதமாக 'விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்’ என்ற நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. இதில், , நடிகர், நடிகைகளில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளோடு, சிறந்த நடிகை, சிறந்த நடிகர், ப்ரைட் ஆஃப் தி சேனல், ஃபேவரைட் மாமியார், ஃபேவரைட் கேம் ஷோ என்பது உட்பட பல விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, நான்காவது ஆண்டு 'விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சி சென்னையில் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, கடந்த 6ம் தேதி மற்றும் 13ம் தேதி என இரண்டு கட்டங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது.
அதன்படி, நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் ஆனந்தபாபுவின் நடனம் அனைவரின் கைதட்டல்களையும் அள்ளியது.

நடனத்திற்குப் பேர் போனவர்:
மறைந்த பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகனான ஆனந்தபாபு, தமிழ் சினிமாவில் தனது குணச்சித்திர நடிப்பு மற்றும் நடனத்தால் ஹீரோவாக வலம் வந்தவர். சினிமாவில் நடனம் என்றாலே கமல், பிரபுதேவா போன்று தனக்கென ஒரு பாணி அமைத்து புதுமையான முறையில் நடனமாடி ரசிகர்களை ஈர்த்தவர் இவர்.

ஆதவன்:
புது வசந்தம், சேரன்பாண்டியன், சிகரம், வானமே எல்லை உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர், சில ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் நீண்ட இடைவெளிகுப் பின், கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தார்.

வித்தியாசமான வில்லன்:
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் ஆனந்தபாபு நடித்து வருகிறார். இந்தத் தொடருக்கும், இவரது நடிப்பிற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

நடன நிகழ்ச்சி:
இந்நிலையில் விஜய் டெலிவிஷன் நிகழ்ச்சி, நடனத்திற்குப் பேர் போன ஆனந்தபாபுவின் நடன நிகழ்ச்சி இல்லாமல் முழுமையடையுமா? ‘தி லெஜண்ட் இஸ் பேக்' என்ற டைட்டிலில் ஆனந்தபாபுவின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

பாடல்களின் தொகுப்பு:
பிரபலமான தனது பாடல்களுக்கு தனது பாணியில் அவர் நடனமாடினார். பின்னர் பிரபுதேவாவைப் போன்று தேவி படப்பாடலுக்கு நடனமாடி கைத்தட்டல்களை அள்ளினார். நீண்டகால இடைவெளிக்குப் பின் அவரது துள்ளலான நடனத்தைக் கண்டு பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ந்தனர். அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது நிச்சயமான அனைவரது மனதிலும் இந்த வார்த்தைகள் தான் ஓடியிருக்கும், ‘எஸ்... தி லெஜண்ட் இஸ் பேக்'!
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications