"நான் நலமுடன் இருக்கிறேன்" வதந்திகளை நம்ப வேண்டாம் - நடிகர் ஆனந்தராஜ்
சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன் என்னை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வில்லன் நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
பாட்ஷா, சூர்ய வம்சம், நாட்டாமை, சிம்மராசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ். புதுச்சேரியை பூர்விகமாகக் கொண்ட இவர், எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

தற்போது ஆனந்தராஜ் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். நேற்று பிற்பகலில் திடீரென அவரது உடல்நிலை குறித்த வதந்தி ஒன்று சமூக வலைத்தளங்கில் பரவியது. மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இந்த தகவல் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
பல திரையுலக பிரபலங்கள் ஆனந்தராஜ் பற்றிய தகவலை நம்பி அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரிக்கத்துவங்கி விட்டனர். பின்புதான் அது வதந்தி எனத் தெரியவந்தது. இதனையடுத்து தன்னைப்பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்காக கிராமம் தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களை விரைவில் சந்திப்பேன். இந்த தவறான செய்தியை யாரும் நம்பவேண்டாம். இதனால் கடவுள் எனக்கு நீண்ட ஆயுளை தருவார் என நம்புகிறேன். இவ்வாறு ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications