92 வயதில் நுழையும் அன்பழகன்... 19ம் தேதி பெரியார், அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார்
Subscribe to Oneindia Tamil

அன்று மாலை சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அன்பழகன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
அன்பழகன் பிறந்த நாள் குறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 92வது பிறந்தநாளையொட்டி வருகிற 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கும், 8 மணிக்கு பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கும் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் 9 மணியளவில் திமுக தொண்டர்கள், நண்பர்களின் வாழ்த்துக்களை அவர் பெறுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications