தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளிலும் ஏஐ பாடத்திட்டம்! பூரித்த அன்பில் மகேஷ்
சூலூர்: அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பாடத்திட்டத்தை கொண்டு வர போவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், சூலூர், புாப்பம்பட்டி பிரிவு, கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியில் நேற்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான இரண்டு நாள் பணி ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலாளர் சுதன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசுப் பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டத்தைக் கொண்டு வர எஸ்சிஇஆர்டி மூலம் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த கூட்டத்தில் அதற்கான ஆலோசனையைத்தான் மேற்கொண்டோம். அடுத்த ஆண்டு எப்படியாவது ஏஐ பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அமெரிக்காவில் ஒரு தொழில்நுட்பம் வந்தால் அது அடுத்த நாளே தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்.
அதற்காகவே பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அமெரிக்க சட்ட சவால்களை கடந்துவிட்டோம்.. ஏஐ-யில்தான் இனி கவனம்! கவுதம் அதானி நம்பிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications