For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாஸ்மாக் கடை போர்டு மீது ஸ்டிக்கர் ஒட்டி அதிரடி.. அன்புமணி, பாமகவினர் கைது

சென்னையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி மற்றும் அறிவிப்புப் பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடத்திய டாக்டர் அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி மற்றும் அறிவிப்புப் பலகைகள் மீது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விளக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் பாமக நடத்தி வருகிறது. சென்னையில் போராட்டத்தை தொடங்கி வைத்து சட்டவிரோத மதுபானக்கடை என்று ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்திய அன்புமணியை இன்று போலீசார் கைது செய்தனர்.

மதுக்கடைகளை அகற்றுவது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் தமிழக அரசைக் கண்டிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சென்னையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி மற்றும் அறிவிப்புப் பலகைகள் மீது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விளக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் பாமக இன்று போராட்டம் நடத்தியது.

Anbumani arrested in Sticker protest against TASMAC shop

சென்னையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மீது அன்புமணி ராமதாஸ், சட்டவிரோத மதுபானக்கடை என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போராட்டத்தை தொடங்கி வைத்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் மூர்த்தியும் பங்கேற்றார். டாஸ்மாக் கடைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.

பாமக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் குன்னத்தில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை விளம்பர பலகையின் மேல் சட்ட விரோத மதுபான கடை என ஸ்டிக்கர் ஒட்டி தங்கள் எதிர்பை தெரிவித்தனர். இதேபோல் செஞ்சி, ஆண்டிமடம் பகுதிகளிலும் பாமகவினர் டாஸ்மார்க் கடை போர்டு மீது ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்தினர்.

English summary
PMK youth wing leader and Loksabha MP Anbumani today arrested by Chennai Police. Supreme Court order to remove all the liquor shops and bars along the national and the state highways
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X