"யோவ் முதல்வரே...உன் தொகுதியா நாங்க... ஒழுங்கா வேலை குடு”- பென்னாகரத்தில் அன்புமணி பிரச்சாரம்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் என்னை ஜெயிக்க வைத்தால் டேய் நாங்க முதல்வர் தொகுதி வேலை கொடுடா என்று உரிமையோடு கேட்கலாம் என்னிடம் என்று பென்னாகரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி, தான் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர், "யோசித்துப்பாருங்கள், உங்கள் தொகுதியில் போட்டியிடுவது முதல்வர் வேட்பாளர். இதுவரை எந்த முதல்வராவது இந்த தொகுதிக்கு வந்திருக்கிறார்களா? இல்லை.
உங்கள் கையில்தான் தமிழகத்தின் எதிர்காலமே இருக்கிறது. இரண்டாவது முறையாக வாய்ப்புக்கேட்டு வந்துள்ளேன். முதல்முறை நாடாளுமன்றத் தேர்தலுக்கு வந்தேன். என்னை வெற்றி பெற வைத்தீர்கள். பென்னாகரம் தொகுதியில் ஒரு கிராமம் கூட விடாமல் அத்தனை கிராமங்களுக்கும் சென்று நன்றி தெரிவித்திருக்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் என்னால் ஒரு சில பகுதிகளுக்கே செய்ய முடியும். ஆனால் முதல்வராகிவிட்டால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் செய்யலாம். ஸ்ரீரங்கம் தொகுதியில் பார்த்தீர்களா..? எத்தனை சாலைகள், எத்தனை கோடி திட்டங்கள். ஸ்ரீரங்கம் என்ன, அதைவிட பிரம்மிக்கத்தக்க வகையில் பென்னாகரத்தை மாற்றுவேன்.
நீங்களெல்லாம் "டேய் முதல்வரே எங்க தொகுதிடா.. வேலைய கொடுடா" னு உரிமையோட கேட்கலாம்" என்றதுடன் "நாம் செய்யவிருக்கும் திட்டங்களைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், நாம் மகத்தான வெற்றிபெற வேண்டும்" என்று பேசியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications