தேவையில்லாமல் என் பெயரைப் பயன்படுத்தினால்.. இளங்கோவனுக்கு அன்புமணி எச்சரிக்கை
சென்னை: காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தில் தேவையில்லாமல் எனது பெயரை ஈவிகேஎஸ் இளங்கோவன் பயன்படுத்துகிறார். இத்தோடு அவர் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் கடைசி முறையாக இருக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணு பிரசாத், சட்டசபைத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவரை திடீரென இளங்கோவன் கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மைத்துனர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார்.
அவதூறுகளை பரப்புகிற நோக்கத்தில் வெளிப்படையாக கருத்துகளை கூறியிருப்பதை கட்சி விரோத நடவடிக்கையாக கருதுகிறோம். எனவே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று கூறியிருந்தார்.
இதற்கு அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது பெயரை எதற்காக இளங்கோவன் பயன்படுத்தினார் என்று அவர் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் என்னுடைய பெயரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேவை இல்லாமல் பயன்படுத்துகிறார். என்னுடைய பெயரை பயன்படுத்துவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. காங்கிரஸ் கட்சி விவகாரத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இனிமேல் என்னுடைய பெயரை பயன்படுத்த வேண்டாம். இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று எச்சரித்துக் கொள்கிறேன் என்று அன்புமணி கூறியுள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications