நீட் தேர்வில் விலக்கு கோரி அன்புமணி ராமதாஸ் உண்ணாவிரதம்!

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

மருத்துவ படிப்பில் தமிழக அரசின் 85 சதவீத இடஓதுக்கீட்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளதால் தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Anbumani keeps hunger strike to demand exception in the NEET exam

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதில் பாமகவினர் பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அவர், தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவை நீட் தேர்வு சிதைப்பதாக உள்ளது என அன்புமணி குற்றம் சாட்டினார். மேலும் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள நீட் தேர்வு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்த அன்புமணி, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தியிருந்தார்.

அன்புமணி ராமதாஸின் இந்த போராட்டத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், டாக்டர் ரவீந்திர நாத் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+