பென்னாகரத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்த பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாமகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி வெல்வார் என பாமக தரப்பு பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் அன்புமணியை திமுக தோற்கடித்து விட்டது. திமுக வேட்பாளர் இன்பசேகரன் 76866 வாக்குகள் பெற்றார். 2வது இடத்தில் வந்த அன்புமணி 58024 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் 18,842 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.
அதிமுகவுக்கு இங்கு 3வது இடமே கிடைத்தது. அதிமுக வேட்பாளர் 51972 வாக்குகளைப் பிடித்தார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, பலம் பொருந்திய பென்னாகரத்தில் தோல்வியுற்றது பாமகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications